Loading

Monday, August 29, 2011

டிவிட்டரில் _தமிழ் கீச்சர்களின் சண்டை !



கடந்த மூன்று நாட்களாக ,ட்விட்டரில் ,ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது !சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் இந்த மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டதால் ,தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படுகிறது !

இதையொட்டி ட்விட்டரிலும் மரணதண்டனையை எதிர்த்து ஒரு தரப்பிலும் ,மரணதண்டனையை ஆதரித்து மற்றொரு தரப்பினரும் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .
மூன்று நாட்களாக நடக்கும் கருத்து யுத்தம் ,ஒருகட்டத்தில் ,எதிர் கருத்து தெரிவிப்போரை ,ஒரு சிலர் தகாத வார்த்தைகளில் சொல்லி காயப்படுத்த ,இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் ,இரண்டு பிரிவாக பிரிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது !

இதன் உச்சகட்டமாக ,பிரபல கீச்சர் ஒருவர் , விஷயத்தை ஜாதி ரீதியாக அணுக ,அதையும் ஒரு சிலர் ஆதரிக்க ,பிரச்சினை  வேறு தளத்திற்கு செல்ல ஆரம்பித்திருக்கிறது !இதையொட்டி  பலபேர் ஒருவரை ஒருவர் ப்ளாக் செய்வதும் ,அன்பாலோவ் செய்வதும் இந்த மூன்று நாட்களில் நடந்தேறியிருக்கிறது.

கருத்து பரிமாற்றம் ,தனி நபர் தாக்குதலாக வடிவமெடுத்திருப்பது ,நடுநிலை ட்விட்டர்கள் இடையே ஒருவித வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது .இதனால் ,பல தமிழ் ட்விட்டர் பயனாளர்கள் எந்தக் கருத்தும் கூறாமல் ,மூன்று நாட்களாக மொத்த ட்விட்டர் டைம்லைனும் ,நெருப்பான வார்த்தைகளில் எரிவதை வேடிக்கை பார்க்கிறார்கள் !

எல்லாவற்றையும் தாண்டி ,தமிழ் கீச்சர்கள் மீண்டும் நட்புடன் திரும்பவேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது !

Wednesday, August 24, 2011

விஜயகாந்திற்கு ஒரு கடிதம் !!



விஜயகாந்த் அவர்களே ! முதலில் உங்கள் பிறந்தநாளுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
மதுரையில் பிறந்து ,திரைத்துறையில் கால் நூற்றாண்டு கோலோச்சிய, சில நடிகர்களில் நீங்களும் ஒருவர், என்பது எங்களுக்குப் பெருமையே !

நடிக்கும் காலத்திலுருந்தே அரசியல் பற்றி தெரிந்துகொண்டீர்கள் . இடைவெளி விட்டு, பகுதி பகுதியாக ரசிகர்களை உருவாக்கிக் கொண்டீர்கள் .ஆறு வருடங்களுக்கு முன்பு கூட, ஹிட் படத்தை கொடுத்தீர்கள் .சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தாலும் ,இப்போது அரசியலில் பொறுத்துப்போவதைபோல் பொறுத்துக்கொண்டீர்கள் ..

சிலர் கூறியது போல ,எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என மழுப்பாமல் ,தெளிவாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினீர்கள் .சொன்னதுபோல் அரசியலில் காலடி வைத்து  ..
நான் ஆட்சிக்கு வந்தால் ,ஐந்து வருடத்தில் சிங்கப்பூராக்கிக் காட்டுகிறேன் என சவால் விட்டீர்கள் ..ஆரம்பத்தில் நீங்களும் கட்சியின் கொள்கை என ஒரு பட்டியலை கொடுத்தீர்கள் ,அதை இன்றைய தமிழன் ,படிக்கக் கூட நேரமில்லாமல் ,கொள்கையே இல்லாமல் ஒரு கட்சி நடத்துகிறார் என அனைவரும் கிண்டல் செய்தார்கள் ..

ஒரு பகுதி மக்கள், உங்களை ஆதரித்தாலும் ,ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் ,உங்கள் கட்சியை பற்றி பேச மறுத்து ஒதுக்கினார்கள் ..அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ,முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்குகளை அள்ளி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தீர்கள்! .கருணாநிதியை, நீங்கள் சாடியது போல் ,ஜெயலலிதா கூட சாடியிருக்க மாட்டார் ! ஆனால் அவரும் உங்களைப் பார்த்து பயந்து, குடிகாரர் என ஆரம்பித்து வைத்தார் ,நீங்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து ,அரசியலில் ஒரு படி முன்னேறச் செய்தீர்கள் !ஆனால் ,நீங்கள் எந்தக் கருணாநிதியை எதிரித்து பேச  ஆரம்பித்தீர்களோ ,,அவரைப் போல இரட்டை அர்த்த வசனம் பேசி ,உங்கள் பேரைக் கெடுத்துக் கொண்டீர்கள் !!

அதன் பிறகு ,சட்டமன்ற கூட்டத்திற்கு சில நாள் சென்று ,பல நாள் தோல்விப் படங்களில் நடித்து, பொழுதைக் கழித்தீர்கள். இடை இடையே ,பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து,தொண்டர்களை தக்க வைத்து ,நானும் இருக்கிறேன் என காட்டினீர்கள். இலங்கை  பிரச்சினை தீவிரமாக நடந்தபோது ,மரியாதை ஷூட்டிங்கில் உட்கார்ந்து  ,உங்கள் மரியாதையை கெடுத்துக் கொண்டீர்கள் .!

அதையும் காலப்போக்கில் மறந்து ,நாடளமன்றத் தேர்தலில் ,என்னைப் போன்ற இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்து ,குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை ,தக்கவைத்துக் கொள்ள உதவி செய்தோம் ...பின் கட்சியின் "நலன்"  கருதி கூட்டணி முடிவைப் பற்றி ஜோசியரிடம் ஆலோசித்து ,பரபரப்பை ஏற்ப்படுத்தி ஆதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தீர்கள் ..உங்கள் முதல் கொள்கையே டமாலாகிப் போனதைப் பற்றி நீங்களும் கவலைப் படவில்லை ,நாங்களும் கவலைப் படவில்லை !சட்டமன்றத் தேர்தலும் ஆரம்பித்தது .,,

உங்கள் கட்சியின் சிறப்பே ,,உங்கள் எளிமையான கிராமத்து பேச்சுதான் ,,அதையும் உங்கள் கரகர தொண்டை ,கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியது ,,பாண்டியன் என்ற பாஸ்கரை அடித்தீர்கள் என பிரச்சாரம் செய்தார்கள் ,குடிகாரர் என ஏளனம் செய்தார்கள் ,,எதையும் கண்டுகொள்ளாத உங்கள் மனதைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும் ,,ஆனால் அது மட்டும் போதுமா ? திருத்திக் கொள்ள  வேண்டாமா ??

சொன்னபடியே எதிர்க்கட்சி தலைவர் ஆகி ,உங்கள் மீதான  கவனத்தை அதிகப்படுத்த செய்தீர்கள் !! இதோ ,தேர்தல் முடிந்து நூறு நாட்களாகி விட்டது ! இருபத்தி ஒன்பது எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ,ஒரு செயலில் கூட ஈடுபட முடியவில்லை ..சிலர் சொல்வது போல உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என சொல்கிறார்கள் !! மக்கள் பிரச்சினையில் போராடினால்தானே அதிலும் ஜெயிக்க முடியும் ,என்ற விசயத்தையெல்லாம் உங்களிடம் யார் சொல்வது !!எல்லாக் கட்சிகளும் ,ஏதோ ஒரு பிரச்சினையில் போராட ,பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள  கட்சி ,கிட்டத்தட்ட நூறு நாள் ,ஓய்வெடுத்துக் கொண்டதுபோல் கோமாவில் கிடக்கிறது !

முடிவாக ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,விஜயகாந்த் என்றாலே அதிரடிப் பேச்சுக்கள் ஞாபகம் வரும் ,அந்த, "விஜயகாந்த்" பதவிக்கு முன், இந்த தமிழ்நாட்டில் இருந்தார் !!

Tuesday, August 23, 2011

அன்னாஹசாரே அடித்த சிக்சர் !



காங்கிரசுக்கு "சனி" பிடித்தாலும் பிடித்தது ,அணைத்து காங்கிரஸ் தலைவர்களும் ஆடிப்போயிருக்கிறார்கள்! அன்னாஹசாரே குழுவினர் நடத்தும், கால வரையற்ற உண்ணாவிரதம் ,எட்டாவது நாளை கடந்துள்ளது !நாடு முழுவதும் உள்ள ,பெரும்பாலான மக்கள், இவ்வுண்ணாவிரதத்திற்கு அளித்திருக்கும் ஆதரவால் ,மத்திய அரசு ,மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது !

உண்ணாவிரதம் நடக்கும் ,டெல்லி ராம்லீலா மைதானம் ,மக்கள் வெள்ளத்தால் ,மிதக்கின்றன ! இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ,கொட்டும் மழையிலும் ,மக்கள் மைதானத்தில் தவமிருந்தது போல் ,இருந்தது ,மத்திய அரசை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது !!


தமிழ்நாட்டில் கூட ,ஆங்காங்கே ,தியாகிகளுடன் சேர்ந்து , ஊழலுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினார்கள் !சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,அன்னா ஹஜாரேவின் ,உறுதியான நிலைப்பாட்டிற்கு ஆதரவு தந்து வருகிறார்கள் !உதாரணத்திற்கு ,ஒரு முதிர்ந்த பெரியவர் ,உண்ணாவிரதத்தால் ,மயக்கம் அடைந்த போதும் ,தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது ,அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது !! இன்னும் சிலர் சோனியாவின் வீட்டருகே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் !!

ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடித்தது போல் ,இந்த உண்ணா விரதத்தையும் ,முடித்து விடலாம் என நினைத்த மத்திய அரசு ,அன்னாவை கைது செய்து ,நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது !காவல்துறை அதிகாரிகளே ,,சனி ,ஞாயிற்றுகிழமைகளில் ,குவிந்த கூட்டத்தை பார்த்து ,திணறினார்கள் !நிறைய அதிகாரிகளின் ஷூக்கள் ,தொலைந்து போனது தனிக்கதை !


அமெரிக்கா கூட ,இவ்விசயத்தை கவனித்து வருகிறது ,,ஆனால் எதுவும் தெரியாதது போல ,இது இந்தியாவின் உள்விவகார பிரச்சினை என்று சொல்லி வைத்திருக்கிறது !!முன்னாள் அதிகாரி கிரண் பேடி ,இந்த உண்ணாவிரதத்தில் மிக முனைப்புடன் செயல்படுகிறார் என்பதை ,, ட்விட்டர் இணையதளத்தில் ,அவர் செய்திகளை தருவதிலிருந்தே தெரிகிறது !இன்று காலை ,மன்மோகன்சிங் வீட்டையும் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டார்கள் !


கடந்த முறை ,அன்னா ஹஜாரே நடத்திய உண்ணாவிரதம் ,அணைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது !இந்த முறை ,,பொதுமக்களையும் உண்ணாவிரதத்தில் பங்கு கொள்ள வைத்திருக்கிறது !!
இந்தமுறை  அன்னா அடித்த சிக்சர் ,இந்தியாவைத் தாண்டி விழுந்திருக்கிறது !!

Sunday, August 21, 2011

பெண் பிள்ளைகள் படும் சித்ரவதைகள்



பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ,வளர்க்கப்படும் பாடு சொல்லி மாளாது !!அதுவும் இந்த கலியுக காலத்தில் ,பாலியல் தொந்தரவை சந்திக்காத பெண்களே கிடையாது என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்டதால் ,பெற்றோர்கள் ,பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர வேறெங்கும் பிள்ளைகளை ,தனியாக அனுமதிக்க பயப்படுகிறார்கள் !!அப்படி பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகள் ,,அங்கேயும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்தால் ??


தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,இந்தியா முழுவதுமே ,பெண் மாணவிகள் ,,குறிப்பாக எட்டாம் வகுப்பு ,ஒன்பதாம் ,,பத்தாம் வகுப்பு மாணவிகளை குறி வைத்து ,,அந்த பள்ளிகளின் ஒரு சில  ஆசிரியர்களே பாலியில் தொந்தரவுகளைத் தர ஆரம்பித்து விடுகிறார்கள் !!இதனால் அம்மானவிகளின் கல்வி பெருமளவு பாதிக்கப் படுகிறது !!

இந்த தொந்தரவுகளை சகிக்காமல் ,பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்டவர்கள் ,இந்தியாவில் அநேகம் பேர் !
சில பிள்ளைகள் ,எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ,ஆசிரியர்களுக்கு தன்னை இரையாக்கி ,ஆண்கள் என்றாலே  வெறுப்பை கக்குகிறார்கள் ! சிறு வயதிலேயே அவர்கள் யாருடனும் பேச பயப்பட்டு தனிமையின் துயரை அனுபவிக்கிறார்கள்  !

சில வருடங்களுக்கு முன்பு ,ஆசிரியர் ,ஒருவர் ,பெண்ணை கற்பழித்து விட்டு ,தன் சக ஆசிரியர்களுக்கும் ,,அவளை  இரையாக்கிய கொடுமை ,இந்திய தேசத்தில்தான் நடந்தது !! வயதான ஆசிரியர்களும் ,,,இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது !!


பெண்மாணவிகள் ,ஆசியர்களின் செய்கைகளை ,,ஆரம்பித்தேலேயே கண்டித்திருந்தால் ,,இது போன்ற சம்பவங்கள் ,ஓரளவேனும் குறைய வாய்ப்பிருக்கிறது !!சில ஆசிரியர்கள் ,மாணவிகளுக்கு ,,மதிப்பெண்களை கூட்டுகிறேன் என்று ஆசை காட்டி ,,தன் தொந்தரவுகளை ஆரம்பிக்கிறார்கள் !!

இதைத்தடுக்க ,,பெண்மாணவிகள் ,தைரியமாக முன்வந்தால் தீர்க்கலாம் !! ஆனால் ,இந்தியாவில் ,பெண்கள்,, ,,எங்கே  நம் மீது ,அவப்பெயர் ஏற்பட்டு விடுமோ என்றே  அஞ்சுகிறார்கள் !வேலியே பயிரை மேயும் இக்கலாச்சாரம் ,வேரறுக்கப்படுவது எப்போது ??

Wednesday, August 17, 2011

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா ??



கடந்த மூன்ற டெஸ்டிலும், மரண அடி வாங்கிய இந்திய அணி ,இன்று நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட்டில் ,ஆறுதல் வெற்றியைப் பெறுமா ?என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது !!

முதல் இடத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்து ,பரிதாபமாக காட்சியளிக்கும் இந்திய அணியின் வீரர்கள் ,,ஒருவராவது நல்ல பார்மில் இருக்கிறார்களா?என்றால் கேள்விக்குறிதான் பதிலாக வருகிறது !! கடந்த மூன்று டெஸ்டிலும் ,,ஒரு இன்னிங்சில் கூட "முந்நூறு" ரன்களை தொடாத அவல  நிலையே நிலவியது !!


அணியின் பயிற்சியாளர் ப்ளட்சேர் ,,தான் பயிற்சியளிக்கும் முதல் தொடரில் ,,இந்திய அணியின் ஆட்டம் ,,இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் !! இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட ,,இந்திய ஆணிக்கு இது ஒரு தற்காலிக பின்னடைவு என்று சப்பை கட்டு ,கட்டுகிறார்கள் !!

அடி பட்ட பூனை எழும்புகிறதா ?/இல்லை மீண்டும் தர்ம அடி வாங்குகிறதா ??,, இன்று தெரிந்துவிடும் !!

Tuesday, August 16, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!


பிறப்பு முதல் இறப்பு வரை ,ஜாதி என்ற ஒரு விஷ ஜந்து,, நம்மை அலைக்கழிக்கும் விதம் பெரிய மலைப்பை உண்டாக்குகிறது !!ஒன்றாய் படிக்கும் பள்ளித்தோழர்களே ,பின்நாட்களில் தன் ஜாதியின் வீரியம் தெரிந்து ,அடித்துக்கொள்ளும் காட்சியை, தமிழகம் நிறைய பார்த்திருக்கிறது !

தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்கள் இல்லாத வருடங்களே கிடையாது !!என் வீட்டில் கூட ,, இரு ஜாதிகளின் பெயர்களை சொல்லி ,, அவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளாதே என அறிவுறுத்தப்பட்டே வெளியே அனுப்பி வைக்கிறார்கள் !!

சில வீடுகளில் ,,தன் பிள்ளைகளின் பிஞ்சு வயதிலேயே ,ஜாதியின் வீரியத் தன்மையை ,,விஷமென்று அறியாமல் விதைத்து விடுகிறார்கள் !! பின்நாட்களில் அந்த பிள்ளைகள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ,,ஜாதிக்கலவரம் என்று வந்துவிட்டால் ,தன் ஜாதியின் பக்கம் சேர்ந்துவிடுகிறார்கள் .

சில நண்பர்கள் ,,இதற்க்கு விதிவிலக்கு என்றாலும் ,,சமூகம் அவர்களையும் ஜாதிப் பிடியில் சிக்கவைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் !! தென்மாவட்டங்களில் ,குறிப்பாக ,,ராமநாதபுர மாவட்டத்தில் ,ஜாதி மோதல்களால் ,வருடத்திற்கு இரு கொலைகள் வீதம் ,,தவறாமல் நடக்கிறது .

குறிப்பாக ,,சில விசேஷ நாட்களில் ,,காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி , ஜாதி மோதல்கள் எழுந்துவிடுகிறது!
கடைகளை சூறையாடுதல் ,,வீடுகளுக்கு தீ வைத்தல் ,,போன்ற பழ விஷயங்களை ,,ஜாதி வெறியர்கள் நிகழ்த்திவிடுகிறார்கள் !!


ஆட்சியாளர்களும் ஜாதி ஓட்டுக்கள் போய்விடும் என்ற அல்ப ஆசைக்காக ,,தமிழகத்தில் ஜாதி வெறியர்களை ,கண்டுகொள்ளாமல் விடுகிறது ,,ஒட்டு மொத்த தமிழகமும் ,,பாரதியின் ,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலின் ,,இரண்டாம் வார்த்தையை  மாற்றி எழுதி, பல வருடம் ஆகிவிட்டது !!

Monday, August 15, 2011

மதுரையில் நடந்த ட்விட்டர் சந்திப்பு !!


நீண்ட நாட்களாக திட்டமிட்ட மதுரை ட்விட்டர் சந்திப்பு ,இனிதே நடைபெற்று முடிந்தது ! இதற்க்காக பல பேரையும் அழைத்திருந்தோம் ,முக்கியமாக மதுரையை சுற்றியுள்ள  ட்விட்டர்கள் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது ! அனைவரும் வந்து சந்திப்பை கலகலப்பூட்டினார்கள்!! இனி நிகழ்ச்சியின் சில துளிகள் ,,

1)இந்த சந்திப்புக்கு ,முழு முதல் காரணம் , டாக்டர் ரியாஸ் அஹமது அவர்கள்தான் ! அவர் எடுத்த முழு முயற்சியை ,,நேற்று அனைவரும் பாராட்டினார்கள் !
2)மற்றொன்று ,,பதிவர்கள் மூன்று பேர் ,,சிறப்பு விசிட் அடித்தார்கள் ! அவர்களுடைய அனுபவப் பேச்சை கேட்டு ரசித்தோம் !


சின்னபையன் அவர்கள் ,எழுதிய வாழ்த்துமடல் ,,அணைத்து ட்விட்டர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது !
பின் அனைவரின் சுய குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்கள் ! நிறைவில்  ஸ்வீட் ..,காரம் ,,பரிமாறப்பட்டது!

இன்னும் பலர் ,சந்திப்புக்கு வர திட்டமிட்டிருந்தார்கள் ,,சில காரணங்களால் இயலவில்லை என தெரிவித்து விட்டார்கள் !


எது ,எப்படியோ ,,இந்த  ட்விட்டர்கள் சந்திப்பு ,,அடுத்த சந்திப்பில் கலந்துகொள்ள ,,நிறைய ட்விட்டர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை !!

Saturday, August 13, 2011

மாண்புமிகு சட்டசபை உறுப்பினர்கள் !


நாம் தேர்ந்தெடுக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ,,ஒழுங்காக கடமையை செய்கிறார்களா ? என்பதை, எல்லாம் மக்களும் நினைப்பதில்லை ,,அந்த உறுப்பினரும் நினைப்பதில்லை !

பொதுவாக தமிழகத்தில் ,,சட்டசபை உறுப்பினர்கள் ,,அவர் கட்சி சொல்வதைத்தான் கேட்கிறார்கள்  ..தனி மனிதனாக ,,தன் தொகுதியின் ,பிரச்சினையை ,நினைத்த உடனே ,சொல்லிவிட முடியாது ..இரு  திராவிட கழகங்களின் கட்டுப்பாட்டில்தான்  ,இந்த உறுப்பினர்களின் வாயசைவுகள் இருக்கும் !!

மற்றொன்று ,,கட்சியே ,சில நேரத்தில் பேச அனுமதி கொடுத்துவிட்டாலும் ,,இவர்கள் வாயை திறந்து ,,தொகுதி பிரச்சினையை ,,சட்டசபையில் பேசுவதே இல்லை ,,சில உறுப்பினர்கள் ,பணத்தால் எம் எல் ஏ ,சீட்டை ,வாங்கியதால் ,,அவர்களுக்கு என்ன பேசுவதென்றே ,தெரியாது !
மூத்த உறுப்பினர்கள் பேச்சை கேட்டு ,,பழகும் இளம் எம் எல் ஏக்கள் என்று தமிழகத்தில் ,யாருமே இல்லை !  நிறைய ,உறுப்பினர்கள் ,சட்டசபை நிகழ்சிகளில் ,,சில நாட்கள் மட்டும் வந்துவிட்டு போவார்கள் !  பல பேர் ,,கலந்துகொள்வதே இல்லை !கையெழுத்து மட்டும் போட்டு ,சம்பளத்தை இடது கையால் பெற்றுக்கொண்டு ,,கிம்பலத்தை வலது கையால் ,,பல பேரிடம் பெற்றுக்கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் !


இப்படிப்பட்ட மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம்  ,,நீங்கள் சட்டசபை முழக்கத்தை ஞாபகப்படுத்தினால் ,,உங்களை பைத்தியக்காரர் ,என்று சொல்லாமல் வேறென்ன சொல்வார் !!

கனிமொழிக்கு தொடர்பில்லை


தலைப்பைப் பார்த்தவுடன் ,விவகாரமாக நினைத்துவிடவேண்டாம் ! கனிமொழி நேற்று கொடுத்த அறிக்கையில் ,,கலைஞர் டிவிக்கும் ,எனக்கும் தொடர்பில்லை ,,என்றார் !

போகிற போக்கைப் பார்த்தால் ,,இன்னும் என்னென்ன சொல்வார் என்று நினைத்து பார்க்கத் தோன்றுகிறது 

1) பங்குகள்தான் என்னிடம் இருக்கின்றன ,,கலைஞர் டிவியில் பங்கில்லை !

2)கலைஞரை அப்பா என்றுதான் சொல்வேன் ,,அதற்காக அவர் எனக்கு அப்பாவாக இல்லாமல் போய்விடுவாரா ??

3)ராசா எனது நண்பர் மட்டுமே ,,ஆனால் அவர் வீடு வரை செல்ல ,எனக்கும் உரிமை உண்டு !


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !வர வர ,,கனிமொழி ,,கலைஞர் போல பேச ஆரம்பித்துவிட்டார் !!

Friday, August 12, 2011

ப்ளூரே தரத்தில் படங்களை தரவிறக்க !!

நம்மில் பலரும் ,,ஆங்கில படங்களை பார்க்கத் தவறுவதில்லை ,அதை சப்டைட்டிலுடன் ,,ப்ளூரே தரத்தில் கிடைத்தால் ??


அப்படி நமக்குத்  தர ஒரு புண்ணியவான் இருக்கிறார் ,,புதுப்படங்களை நல்ல குவாலிட்டியுடன் பலர் தந்தாலும் ,,நமக்கு ஆங்கிலப் படங்களை .,சப்டைட்டில் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது (அட ,எனக்கும்தாங்க )..இந்த சுட்டியில்  http://thepiratebay.org/user/YIFY/  ,தரமான குவாலிட்டியில் ,,குறைந்த அளவு எம்பியுடன் ,,மால்வேர் தொந்தரவுகள் இல்லாமல் ,,படங்களை தரவிறக்கிக் கொள்ள முடியும் !!

டோர்ரென்ட் அப்ளிகேசன் ,,இல்லாதவர்கள் ,,முதலில் அதை தரவிறக்கிக் கொள்ளுங்கள் !!    http://www.utorrent.com/

அண்ணா ஹசாரேவின் சொதப்பல்கள் !


பல ஊழல்கள் ,,கருப்பு பண விவகாரத்திற்கு, எதிராக நாடே சலிப்படைந்திருந்த போது,சமூக சேவகர் ,அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து ,அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் !

அப்படிப்பட்ட அண்ணா ஹசாரேவின் இன்றைய நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை .அண்ணா ஹசாரே குழு தயாரித்த அறிக்கையை அரசு ஏற்காமல் ,தானாக ஒரு லோக்பால் வரைவுச் சட்டத்தை முன் வைத்தது ! அண்ணா ஹாசாரே முதலில் முரண்டு பிடித்து ,,சிறிய திருத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர் !

பின்பு ,இதை ஏற்க மறுத்த அண்ணா ஹசாரே ,மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார் ..மீண்டும் இரு தரப்புக்கும் இழுபறி ,இதனிடையே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் ,எந்தப் பலனும் ,,பதிலும் கிடைக்கவில்லை !

பின் நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ,லோக்பால் அறிக்கையின் நகலை ,பொது இடத்தில் கூடி எரித்தார்கள் ,பின் சோனியாவுக்கு ,,காங்கிரசின் உறுப்பினர்களை பற்றி குறை சொல்லி கடிதம் எழுதினார் !

எங்கள் குழுவின் அறிக்கை ஏற்கவில்லை என்றால் ,,ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார் ,,பின் காலவரையற்ற உண்ணாவிரதம் என்றார் !இன்று காலை ,,மூன்று நாட்களுக்கு மட்டும் உண்ணாவிரதம் என்கிறார் ,,எந்த இடத்திலும் தான் உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார் ..ஒரு நேரத்தில் ,அரசின் பேச்சை கேட்க முடியாது என்றார் ,பின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்கிறார் !

முன்பு நரேந்திர மோடியை புகழ்ந்தார் ,,எதிர்ப்பு வரவே ,,அவரை உதறிவிட்டு ,சோனியாவை புகழ்ந்தார் ,,!! மன்மோகன் நல்லவர் ,ரிமோட் தான் சரியில்லை என்றார் !வர ,வர , அரசியல்வாதிகள் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் போல ...நம்ம ராமதாசே இவரிடம்  தோற்றுவிடுவார் !!

பலே பலே ,,நடத்துங்க அண்ணா ஹசாரே !!

Thursday, August 11, 2011

நாயக்கர் மஹாலை கெடுத்த சினிமா குழுவினர் !


மதுரையில் பெருமை வாய்ந்த பொக்கிஷங்கள் இரண்டு ! 1 . மீனாட்சி அம்மன் கோவில் ,,2. திருமலை நாயக்கர் மஹால் !

இவ்விரு பொக்கிஷங்களையும் ,,முடிந்த மட்டும் பாழ்படுத்தி விட்டார்கள் நம்மூர் யோக்கியவான்கள் .முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் வெளிவாசல் வரை ,,லாரிக்காரனும் ,,ஆட்டோக்காரனும் உரசிக்கொண்டு போவார்கள் ! பல முறை மனு கொடுக்கப்பட்டதால் ,அங்கு வாகன உபயோகம் தடைசெய்யப்பட்டு ,தாமதமாக புண்ணியம் தேடி கொண்டார்கள் !

திருமலை நாயக்கர் மஹாலை ,,மதுரைக்கார்களே பொக்கிஷமாக ,நினைக்கத் தவறிவிட்டார்கள் !! ஏதோ சினிமாக் காரர்களுக்கு மட்டுமே உபயோகப்படுகிற விஷயம் என நினைத்து விட்டார்கள் போலும் ..சினிமாக் கார்களுக்கு குறைந்த செலவில் வாடகைக்கு ,இந்த மஹால் கிடைத்து விடுகிறது !ஏற்கனவே பொக்கிஷங்கள் பலவற்றை ,கால இடைவேளையில் இழந்த நாயக்கர் மஹால் ,படப்பிடிப்பு  .குழுவினரால்  முற்றிலுமாக பாழ்பட்டு விட்டது .அவர்கள் பாதி தரைத்தளங்களை பெயர்த்து விட்டார்கள் ..

மகாலின் மேற்புறம்  செட் போடுகிறேன் ,பேர்வழி என்று ஒருவழி பண்ணிவிட்டார்கள் ,,கேட்கத்தான் நாதியில்லை ,,மிகப்பெரிய   தூண்களில் ,கலர் துணிகளை கட்டி ,அதன் பளபளப்பை குறைத்து ,அதன் முக்கிய சாராம்சத்தையே இல்லாமல் செய்துவிட்டார்கள் .
மிகவும் தாமதமாக விழித்துக்கொண்ட மதுரை வக்கீல் ,கிளை நீதிமன்றத்தில் ,,படப்பிடிப்பு நடத்த தடை ஆணையை ,பெற்றிருக்கிறார் !

"மஹால் மீண்டும் பழைய பொலிவைப் பெற ,நாயக்கரே மீண்டும் உயிர்த்தெழுந்தால்தான் உண்டு "!

போலீஸ்காரரும் ,புதுப் பட டிவிடியும் !!



காவல்துறையில் ஒழுக்கசீலர்கள் என்ற விசயமெல்லாம் ,,பொதுமக்களே மறந்த போன விஷயம் ..அதனால் அதை விட்டுவிடுவோம் .நான்  .சொல்லப்போகும் காவல்காரரின் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது ..மதுரை வீதிகளில் ,நெரிசல் மிகுந்த பஜாரில் ,இவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்  வேலையில் இருக்கிறார் ..இவரின் ஆசையே மிகவும் அல்பமானது ...அது என்னவென்று பார்க்கும் முன்  ...
  
போன மாதம் வரை ,மதுரை வீதிகளில் ,திருட்டு டிவிடி கடைகள் ,சந்துபொந்தெல்லாம் நிறைந்து கிடந்தன ,,எல்லா டிவிடிக்களுமே பதினைந்து ரூபாய் ,,இருபது ரூபாய் வீதம் புதுப்படங்களை கூறு போட்டு விற்று கொண்டிருந்தார்கள் ,,

நம் ஏட்டு ,,என்ன செய்வார் என்றால் ,,பெரிய அதிகாரிகள் ,,ரெய்டு என்று வரும்போது ,,முன்கூட்டியே தகவலை , திருட்டு டிவிடி விற்பவர்களிடம் கூறிவிடுவார் .. அதற்க்கு சன்மானமாக புதுப்பட டிவிடிக்களை இலவசமாக அள்ளிச்செல்வார் ,,இதனால் டிவிடி கடைக்காரர்களின் பிழைப்பு பிழையில்லாமல் இருந்தது ..

அதோடு விடுவாரா நம் ஏட்டு ,,பலான பட டிவிடிக்களை ,,மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்வார் ,,அதற்க்கு அவர் உச்சரிக்கும் வார்த்தையை சொல்லியாக வேண்டும் ,,,"சாவு இருக்கா " என்றுதான் கேட்பார் !! தினமும் புதுவிதமான காட்சியுள்ள டிவிடிக்களையே இலவசமாக வாங்குவார் ....இப்படி இவர் வாங்கிய டிவிடிக்கள் ஆயிரத்தை தாண்டும் !புரியுதோ புரியவில்லையோ ,,ஹாலிவுட் பட டிவிடிக்களையும் வாங்கிக்குவார் ..

யார் கண் பட்டதோ தெரியவில்லை ,,அவர் பிழைப்பில் மண் விழுந்தது ,,ஆட்சி மாறியது ,,காட்சியும் மாறியது ,  புதிய ஆதிகாரிகள் ,,மதுரையில் உள்ள திருட்டு டிவிடிக்கள் கடையை முற்றிலுமாக மூடச் செய்தார்கள் !! நடத்திய ரெய்டில் இரண்டாயிரம் டிவிடிக்கள் கைப்பற்றப்பட்டன !!

இன்று நம்  ஏட்டு என்ன செய்கிறார் தெரியுமா?? ,,கைப்பற்றிய ரெண்டாயிரம் திருட்டு டிவிடிக்களை அதிகாரிகளின் வீட்டுக்கு சப்ளை செய்து வருகிறார் !!

Wednesday, August 10, 2011

தோனியின் மூன்றாம் சறுக்கல் !



தோனி அணியை ,தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் ,இன்று முகம் தொங்கி போயிருக்கிறார்கள் !பெற்ற வெற்றிகளுக்கு திருஷ்டியாக இங்கிலாந்தில் ,http://cricket.yahoo.com/photos/cricket-photos-of-the-week---7-8-11_13127175296030#1 அடி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் .இதோ ,இப்போது கூட மூன்றாம் டெஸ்டில் ,தட்டுத் தடுமாறி இருநூற்று சொச்ச ரன்களில் சுருண்டது நம் இந்திய அணி !

பெற்ற வெற்றிகள் பெரிதல்ல ,பெறப்போகும் வெற்றிகளையே ரசிகர்கள் கொண்டாடுவார்கள் !இதுவரை உள்ளூர் தொடரில் மட்டுமே பிரகாசித்த இளம் வீர்கள் ,அங்கு ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள் !இங்கு பெற்ற வெற்றியை வைத்து எடைபோட்டவர்கள் ,,வெளிநாட்டுத் தொடரில் ,தோனியை எடை போட வேண்டிய நேரமிது .

ஒன்றை கவனித்து பார்த்தால் ,நன்றாக புரியும் ,ஆதி காலந்தொட்டே ,அதாவது இருபதாம் நூற்றாண்டில் இருந்தே ,இந்திய அணிக்கு வெளிநாட்டுத் தொடர் என்றாலே ,சுத்தமாக ஆகாது .ஏதோ ஒன்றிரண்டு வீரர்கள் ,சதமடித்து திருப்தி பட்டுக் கொள்வார்கள் ,அந்தக்கதை இந்த இங்கிலாந்து தொடரிலும் தொடர்கிறது .

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து ,தென் ஆப்ரிக்கா, தொடர் என்றாலே ,இந்திய அணிக்கு அலர்ஜிதான் ,,வேகப் பந்துவீச்சை சமாளிக்கும் தகுதி உள்ள திராவிட் ,லட்சுமன் ,சச்சின் போன்றோர்களே திக்கித் திணறுவார்கள் !இதில் தோனி பாய்ஸ் மட்டும் விதிவிலக்கா என்ன ??
இந்த மூன்றாம் டெஸ்டில் கூட ,இந்தியாவுக்கு வெற்றி என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது ! நம்பர் 1 இடமும் போச்சு ! தோனியின் முகமும் கிழிஞ்சிபோச்சு !

பி .கு ! இது தெரியாமல் ,சச்சினின் நூறாவது சதம் பற்றி ,,ஏங்குபவர்கள் ,அடுத்த டெஸ்டிலும் ஏங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது !

தெய்வத்திருமகள் !! புதிய கோணம் !



ஒரு திரைப்படத்தின்  கதையை  எங்கிருந்து உருவினாலும் ,,அதை திரைக்கதையாக செதுக்கி ,விறுவிறுப்பு குறையாமல் எடுப்பது என்பது ,,சாதாரண விசயமல்ல !! அந்த வகையில் ,,வேற்று மொழி படத்தின் மையக்கருவை  மட்டும் உருவி ,இன்ன பிற விசயங்களை சேர்த்து ,,ஒரு அழகான காவியமாக கொடுக்கப்பட்டதுதான் தெய்வத்திருமகள் திரைப்படம் !

படத்தின் கதை அனைவரும் அறிந்ததே ,ஐந்து வயது மகளை ,,சிறிதளவில் மன வளர்ச்சி குன்றிய  தந்தை எவ்வாறு பராமரிக்க முடியும் ? என்பதே கதையின் மையக்கரு ! இந்த கதையை ,,தமிழுக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அனுபவம் இல்லாமல் செதுக்க முடியாது ! நிறைய தமிழ்ப்படங்கள் வேற்றுமொழி படக் கதையை உருவி எடுத்தும் கூட ,,வந்த சுவடே தெரியாமல் போயிருக்கிறது ! இன்றைய சூழலில் ,,அழுகை நிறைந்த காட்சிகளை  எடுத்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள் .அதிலும் புதுவித பாணியை கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஜய் !

குழந்தைப் படம் என்று பெரிவர்கள் நினைத்துவிடாதபடி ,திரைக்கதை அமைத்திருக்கிறார் .உதாரனத்திற்கு,அந்த நீதிமன்ற க்ளைமாக்ஸ் காட்சியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு .. இரு மூத்த வக்கீல்களின் சின்ன  பாத்திரங்கள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுத்தன ! அவர்கள் பேசும் அடாடாட ,,அபபபபாபா என்ற வாக்கியங்களை கேட்கும்போது ,அந்த சோகமான கதைச்சூலளையும் கலகலப்பாக ஆக்கிய திறமை விஜய்க்கே சாரும் !


ஜி .வி பிரகாசின் ,,பின்னணி இசை ,,இளையராஜாவின் பின்னணி இசை பாணியில் சிறப்பாக இருந்தது ,பாடல்கள் எல்லாமே ,,எங்கிருந்தோ உருவிய பாடல்கள் என்றும் சொல்லபட்டால் கூட ,,கதையின் போக்குக்கு ஏற்ற விதமாய் அமைந்து இருந்தது ! முக்கியமாக ஆரிரோ ,,இது தந்தையின் தாலாட்டு ,,மிகவும் நேர்த்தியான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட பாடல் .

நடிகர்களை பற்றி சொல்வதென்றால் ,,விக்ரம் ,,நாசர் ,,சந்தானம் ,பாஸ்கர் என்று அத்தனை பேருமே தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள் !நடிகைகள் அனுஸ்காவுக்கு முக்கிய கதாபாத்திரமாய் ஜொலித்திருக்கிறார் ,,அமலா பாலின் நடிப்பு போதுமானதாய் இருந்தது !

மொத்தத்தில் தெய்வத்திருமகள்  எடுத்த 'தெய்வதிருமகன்' விஜய்க்கு வாழ்த்துக்கள் !! இந்த வருடத்திற்க்கான சில ,பல விருதுகளை வெல்லும் என்று நிச்சயமாக சொல்லலாம் !

கலைஞர் டிவியின் செய்தித் தரம் !


கலைஞர் தொலைக்காட்சியின் ,,செய்திப் பிரிவை பற்றி கண்டிப்பாய் சொல்லியாக வேண்டும் !  ஒவ்வொரு செய்திகளையும் அவர்கள் அலசி ஆராயும் பாங்கு யாருக்கும் வராது ! நேற்று கூட சமச்சீர் கல்வி பற்றி  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் வழங்கியது !! கலைஞர் டிவியின் செய்திப் பிரிவு ,,ஏதோ ஜெயலலிதா அரசு கவிழ்ந்தது போல் ,,ஒரே உற்சாக நேர்காணல்கள் நடத்துகிறார்கள் !!
 
அதிலும் ,,செய்தி வாசிக்கிறவர் ,,ஏதோ தனக்கு பரிசு கிடைத்தது போல் உற்சாகமாக பேசுகிறார் . அவர் சொல்கிறார் ,,இப்போதுதான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ! இந்த அரசு எதை வேண்டுமானாலும் செய்து விடும் என்று . அதிலும் சுப .வீரபாண்டியன் வேறு ,,இன்னும் ஒரு படி மேலே போய்,,மக்கள் அனைவரும் வீதியில் போராடியதாலையே  இந்த தீர்ப்பு கிடைத்தது என்றும் ! தமிழகம் காப்பற்றப்பட்டது என்றும் பேசினார்கள் !

ஏதோ ,தமிழகம் ,,அடக்குமுறையில் வாழ்வது போலவும் ,,இவர்கள் நம்மை காப்பாற்றியது போலவும் ,,அப்பப்பா ,என்னா ஒரு மிகைபடுத்தல் செய்தி !இப்படிதான் தேர்தல் நேரத்திலும் ,,ஆதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உடைந்துவிட்டது ,,இனி அவர்கள் சேர வாய்ப்பே இல்லையென்று ,,ஒரு நிருபர் கூறுகிறார் ! தமிழர்கள் எல்லாம் சர்வ மடையர்கள் என நினைத்திருக்கிறார்கள் போல !எதை சொன்னாலும் கேட்டுவிடுவோம் என்ற நினைப்பு அவர்களுக்கு !
முதலில் செய்திகளை எப்படித் தருவது என்று  யாராவது ,இவர்களுக்கு சொல்லித்தந்தால் தேவலை !

நீங்கள் கனவில் இருக்கும்போது ??


நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ,கனவு காணும்போது ,பல விஷயங்கள் நடக்கின்றன ! நீங்கள் காணும் கனவு ,உங்களுக்கு கனவாக தெரியாமல் ,நிஜவுலகில் பயணிப்பது போன்று தோன்றும் !இதை நீங்கள் inception,படம் பார்த்திருந்தால் ,எளிதாக புரியும் .மேலும் உங்கள் கனவில் ,பல விஷயங்கள் ,ஒரே நேரத்தில் உங்களை குழப்பியெடுக்கும்..உதாரணமாக ,நீங்கள் பல்வேறு காலகட்டங்களில் பழகிய முக்கிய நபர்களை ,நீங்கள் அக்கனவில் சந்திப்பீர்கள் !
 
இதில் சில பேருக்கு மாறுபடலாம் ,,புதிய நபர்களை சந்திப்பது போன்று ,,கூட உங்கள் கனவு அமைக்கப்படுகிறது !உண்மையில்  உங்கள் கனவின் இயக்குனரே நீங்கள்தான் ,உங்கள் மூளை ,அந்தநேரத்தில் தோன்றுகிற அத்தனை விசயங்களையும் ,ஒரே நேரத்தில் காட்சிகளாக காண்பிக்கிறது !
ஒரு சிலருக்கு ,தாங்கள் பார்த்த திரைப்படத்தில் ,அவர்களே ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது போல் கனவுகள் தோன்றுகின்றன .

ஆராய்ச்சியாளர்கள் கூட ,கனவின்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ,இன்றும் நமக்கு சரியாக விளக்கவில்லை .கனவு ஒரு அமானுஷ்ய விசயத்தையே நமக்கு விட்டுச்செல்கிறது !! கனவை நாம் கட்டாயப்படுத்தி வரவைக்க தேவையில்லை ,,வரவைக்கவும் முடியாது !

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி _தீர்ப்பின் தாக்கம்

இரண்டு மாதங்களாக சமச்சீர் கல்வி வருமா ,வராதா ,,என்ற இழுபறிக்கு ,,உச்சநீதிமன்றம் தீர்வு அளித்திருக்கிறது ! சமச்சீர் கல்வியே தொடர ஆணையிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். சமச்சீர் கல்வியில் சில ,பல குளறுபடி இருந்தாலும் ,அதை ஆரம்பித்தால்தானே ,குறைகளை களைவதற்கான  வழிவகை  பிறக்கும் என்பது பலரது வாதம் ! 
இந்த விசயத்தில் ஜெயலிதாவின் அணுகுமுறை சரியா ,,என்பதில் மக்களிடையே இருவேறு கருத்துக்கள் இருக்கிறது ..எது எப்படியோ ,,பிள்ளைகளின் ரெண்டு மாத அலைச்சலுக்கு ஒரு தீர்வு கிடைத்து இருக்கிறது! அது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லதா ,,கெட்டதா என்பது அடுத்த வருடம் தெரிந்துவிடும் !  
 எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு ,இன்னும் சில நாட்களுக்கு ,,மேடைகளில் முழங்குவார்கள் ! அது அவர்கள் பாடு ! படிப்பது நம் பிள்ளைகளின் பாடு! இதை சொல்வது என் பாடு!

அறிமுகம்

வணக்கம் !!
                       என் நண்பர்கள் ,என்னை கேட்பதுண்டு ,நீ ஏன் ,ஏதாவது எழுதக்கூடாது என்று !

இன்னும் எழுதப்படாத எத்தனையோ விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது ! அந்த விஷயங்கள் ,முதலில் எனக்குத் தெரிய வேண்டுமே !அதன் பின் எழுதுவது சாலச்சிறந்தது ! அப்போ ,இப்போ ஏன் எழுதுறேன்னா ,,பொழுது போகலைங்க !! வேற வழி ,,எழுதிட வேண்டியதுதான் !
படிக்கதான் நீங்க இருக்கீங்களே ,,அப்புறம் என்ன ,,இனிதே ஆரம்பமாகிறது ,,உங்கள் உடன்பிறப்பின் ,,இனிய தளம் !
 
இணையதள அன்பர்களுக்கு ,நான் பரிச்சியமானவந்தான் ! ட்விட்டரில் இருக்கும் அந்த உடன்பிறப்பேதான்!!  https://twitter.com/#!/udanpirappe

பிரபலமான பதிவுகள்