Loading

Sunday, February 12, 2012

க்க்க்க்காதல் கதை

கட்டுரை .காமில் வெளிவந்த எனது சிறுகதை .


சரவணனுக்கு காதல் என்றாலே ஆகாது ,பக்கத்து வீட்டு பிள்ளைகளிடம் கூட ,பேசமாட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ,என்று சரவணனின் அம்மா ,வந்திருந்த விருந்தினர்களிடம் சரவணபுராணம் பாடிக்கொண்டிருந்தாள் .உண்மையில் சரவணன் அப்படிப்பட்டவனா?
வாருங்கள் சரவணனின் வாழ்க்கையை, அவனுடைய அம்மாவை தவிர்த்து விட்டு பார்ப்போம் .
காதல் செய்யாவிட்டால், பிறந்ததே வேஸ்ட் என்ற சினிமாக்காரர்களின் திரைப்பட வசனங்களை கேட்டு வளர்ந்த சரவணன் , அதன்படியே முதல் காதல்களை செய்யத் தொடங்கினான் .அதென்ன ’முதல் காதல்கள்’ என்று நீங்கள் கேட்கவருவது புரிகிறது.
பிற்பகுதியில் சரவனனே உங்களுக்கு பதில் தருவான் . அவனுடைய முதல் காதல் ,பள்ளிப்பருவத்தில் வளமையாக தொடங்கியது.”மிதுனா” என்ற மிருதுவான பிகரை (அவனே ,அவளைப்பற்றி வர்ணித்தது ) மடக்கினான். இருபது ரூபா கிரீட்டிங் கார்டை கொடுத்து கரெக்ட் செய்த மிதுனாவை, ஓரக்கண் , மாறுகண் என்று பல கலைகளைக் கொண்டு பார்த்து, பேசி மிதுனாவின் மனதுக்குள் நங்கூரமிட்டான். இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி ரிசுல்ட்டுக்காக காத்திருந்தார்கள். சரவணன் பாஸாக, மிதுனா ,சரவணனை விட 200 மார்க் பின்தங்கியது ,அவனுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை ,ஆனால் சுற்றியிருந்த என் போன்ற நண்பர்கள், மிதுனாவின் பாழாய்ப் போன மார்க் லிஸ்ட்டை குறை சொல்லியே, சரவணனின் மனதை மிதுனாவிடமிருந்து வாபஸ் வாங்கவைத்தோம்! கொஞ்ச நாள் வருத்தப்பட்ட சரவணன், ஜென்சியின் வருகையில் மீண்டும் தெளிர்ச்சியடைந்தான் .
ஜென்சி… பன்னிரெண்டாம் வகுப்புக்கு புதிதாக அட்மிஷன் வாங்கி வந்தவள் .ஜென்சியின் அழகை , அவளின் இளமையான முகப்பருவே சொல்லிவிடும். சரவணனுக்கு ஜென்சி மீது இரண்டாவது ,முதல் காதல் தொடங்கியது .ஒவ்வொரு புதிய காதலும், முதல் காதல் தான் என்பது சரவணனின் முக்கியக் கொள்கை .ஜென்சிக்கு கெமிஸ்ட்ரி பாடத்தில் வந்த சந்தேகங்களை, மிகத் தெளிவாக புரிய வைத்து, ஜென்சியுடன் நல்ல கெமிஸ்ட்ரியை உருவாக்கிகொண்டான் .தினமும் பைவ் ஸ்டார் சாக்லேட்டை, சரவனனுக்காக ஜென்சி வாங்கிவருவாள் .படிப்பில் சரவணனை விட ஜென்சி ஒரு படி மேல் என்பதால், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சரவணன் பின் தங்க , ஜென்சி பறந்தோடியது ..சரவணின் வாழ்கையில் வரலாற்றுப் பிழையாகிப்போனது .
பின் ஒரு வருடம் ,கடமைக்காக சில ,பல பெண்களை பார்த்துவிட்டு ,கல்லூரியின் இரண்டாவது ஆண்டில் ,மூன்றாவது முதல் காதலியான கனிதாவை சந்தித்தான் நம் சரவணன் .கனிதாவை நான் வர்ணிக்க சரவணன் (எடிட்டர் ) அனுமதி கொடுக்காததால்,கனிதாவும் ஒரு நல்ல பெண் என்பதை மட்டும் தெரிவித்துகொள்கிறேன் .

செல்போன் பரவலாக பரவியிருந்த நேரமது ,சரவணனும் புது செல்போன் வாங்கினான் ,வாங்கிய கையுடன் ,கனிதாவின் காலேஜ் பேக்கில் போட்டுவிட்டு ,செல்போனை காணவில்லையென்று செல்ல நாடகமொன்றை நடத்தினான் ..அந்த குறும்பில் கனி(தா) மேற்கொண்டு பழமாக ,பின்பு முத்தங்கள் ,சத்தங்களோடு சந்தோசமாக இருந்தான் .இப்படிப்பட்ட முதல் வருட கனிதாவை ,கடைசி வரை காதலியாக வைத்திருப்பேன் என சத்தியம் செய்தான் .சொன்னபடியே கனிதாவை காதலியாகவே வைத்திருக்கும் நிலையும் வந்தது ..கனிதாவின் அப்பாவுக்கு காதல் விஷயம் தெரியவர ,கனிதாவின் கல்லூரிப்படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் .கையோடு திருமண ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் .சரவணனுக்கு கல்யாண அழைப்பிதழ் வந்தது ..கடைசி தடவையாக கனிதாவை பார்த்துவிடலாமென எண்ணி புறப்படுகையில் ,அட்ரெஸ் கேட்டு அனிதா வந்தாள் ..
அனிதாவின் கதையை சொல்லலாமென்றால், அதன் பின் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த கல்பனா, மற்றும் உஷாவின் கதைகளைச் சொல்லியாக வேண்டும்.
இதையெல்லாம் வரிசையா ஒவ்வொண்ணா பாத்திடுவோம். அதுக்கு முன்னாடி சரவணனோட அம்மா என்னவோ சொல்றாங்க. என்னான்னு கேட்போமா?
“என் பையன் சரவணன், தங்கமான பையன், அவனுக்கு காதல் என்றாலே சுத்தமாக ஆகாது, பக்கத்துக்கு வீட்டு பொண்ணுங்ககிட்ட கூட பேசமாட்டான்னா பார்த்துக்கோங்களேன்”
நாசமாப் போச்சு!

6 comments:

  1. இப்பொழுதுதான் விமர்சனம் படித்து விட்டு வருகிறேன்..சிறப்பாக உள்ளது..சிறுகதையும் அருமையாக இருக்கிறது..தொடரட்டும் தங்கள் பணி..வாழ்த்துக்களோடு எனது நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  2. நல்ல கதை நண்பா! வாழ்த்துக்கள் உங்களது முயற்சிக்கு..!

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே

    ReplyDelete
  4. யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!
    http://vstamilan.blogspot.com/2012/02/blog-post.html

    ReplyDelete
  5. மிக்க நன்றி சுப்ரமணியன் அவர்களே ..உங்கள் அன்புக்கு நன்றி

    ReplyDelete
  6. செம்ம மச்சி:)

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்