Loading

Friday, March 9, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் !(தமிழ் சினிமா )

அதர்வா ,அமலாபால் ,மற்றும் சந்தானம் நடித்த திரைப்படம் .


அதர்வா (ராம் )ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞன் .அதர்வாவுக்கு சாருலதா (அமலாபால் ) என்ற காதலி இருக்கிறாள்,
இருவரும் ஒரே பிளாட்டில் வசிக்கிறார்கள் . அதேநேரத்தில் அமலாபாலுக்கு அமெரிக்காவில் திருமண நிச்சயம் நடக்கிறது .சொந்தங்களை பார்ப்பதற்காக
இந்தியாவுக்கு திரும்பிவருகிறார். இங்கு வந்து பார்க்கையில் ,அமலாபாலின் அலுவலகத்தில்தான் அதர்வா வேலை பார்க்கிறார் என்பது தெரிகிறது. அதர்வாவுக்கு அமலாபால்
யாரென்பதே தெரியவில்லை .அதர்வாவின் காதலியிடம் ,உன்னைப் போலவே எங்கள் அலுவலக எம்டி(அமலாபால் ) இருக்கிறார் என சொல்கிறார் .

அமலாபாலுக்கு சந்தேகம் வருகிறது.ஏனென்றால் ,அமலாபாலுக்கு அதர்வாவுடன் நட்புடன் பழகியது நினைவுக்கு வருகிறது அதர்வா யாருடன் குடும்பம் நடத்துகிறார்,
யாருடன் செல்போனில் பேசுகிறார் ,என்று அறியும் ஆவலாய் ,பிளாட்டுக்கு ஒரு
மனோதத்துவ நிபுணருடன் செல்கிறாள் .அங்கு போய் பார்த்தால் ,அதர்வா மட்டும் தனியாக அமலாபாலுடன் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு வாழ்கிறார் .
அவர் ஏன் அப்படி வாழ்கிறார் ? என்பதை பிளாஷ்பேக்குகளுடன் சொல்லி ஒரு வழியாக கதையை முடிக்கிறார்கள்.





முதல்பாதி  வரை நன்றாக கதையை நகர்த்திய இயக்குனர் எல்ரட்குமார் ,பிற்பகுதியில் மிகவும் சொதப்பிவிட்டார் .ஒரு த்ரில்லர் படத்துக்குண்டான கதையை ஆரம்பித்து
இடையிலையே அந்த சஸ்பென்சை உடைத்துவிடுவதால் ,படத்தின் மீது மேற்கொண்டு ஆர்வமாக ஓட்டமுடிவதில்லை .இதில் அதர்வாவின் கோபமான நடிப்பு
கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது .அமலாபாலின் எக்ஸ்ப்ரெஸன் ஓகே ரகம் .சந்தானத்தின் காமெடி ,ஏற்கனவே பழகிய விஷயம் என்பதால்
பெரிதாக ஒன்றுமில்லை .

இசை ஜிவி.பிரகாஷ் .ரெண்டு பாடல்கள் இப்போதைக்கு தேறுகிறது. fightclub படம் போல் ,சிறப்பாக எடுத்திருக்கவேண்டிய படத்தை ,சொதப்பலான திரைக்கதையில்
கோட்டைவிட்டு இருக்கிறார்கள் .

முப்பொழுதும்' உன் கற்பனைகள் - கற்பனை வறட்சி !




1 comment:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வலைக்கு வருகிறேன்.
    நல்ல விமர்சனம்.மிக்க நன்றி.
    தமிழ், ஆங்கில படங்கள் என எல்லா வகையான படங்களுக்கும் சிறப்பாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்