Loading

Friday, March 30, 2012

ராமஜெயத்தின் படுகொலை !சொல்வது என்ன ?


திமுகவின் பெரும்புள்ளி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ,நேற்று மர்ப நபர்களால் கடத்தப்பட்டு
கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .கொலை எதனால் நடந்தது என்று குறிப்பாக சொல்லமுடியாவிட்டாலும்
ராமஜெயத்தின் பல அடாவடி செயல்களில் ,பாதிக்கப்பட்ட மற்றொரு கும்பல்தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது
என்பதை சுலபமாக ஊகிக்க முடிகிறது .

கடந்த ஆட்சியில்தான் ,ராமஜெயத்தின் கரங்கள் திருச்சி முழுவதும் ,அசுரத்தனமாக அத்தனை இடங்களையும்
வளைத்து போட்டிருக்கிறது . திருச்சியின் மையமே  தான்தான் எனும்படியாக ,அவர் நடந்துகொண்ட விதத்தை
திருச்சி மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் .2007ல் ரியல் எஸ்டேட் ,தொழில் போட்டி தகராறில் இருவரை ,காரோடு எரித்துக்கொன்ற சம்பவத்தில்தான்
முதன் முதலில் ராமஜெயத்தின் பெயர் ,அனைவருக்கும் பரிச்சயமானது .திருச்சியின் ஆட்சியே ராமஜெயத்தின் கையில் இருந்ததால்
தட்டி கேட்க ஆளில்லை  .எந்த ஒரு முறைகேடான விசயத்தையும் ,மறைமுகமாக செய்யாமல் ,வெளிப்படையாக
அடாவடி ஆட்களுடன் காரியத்தை முடித்த விதம் சொல்லி மாளாது .




நிலம் சம்பந்த பட்ட விஷயத்தில்தான் ,ராமஜெயத்துக்கு ஆர்வம அதிகமாக இருந்திருக்கிறது .திருச்சியில் உள்ள பல நிறுவங்கள் 
ராமஜெயத்திற்கு கப்பங்கள் கட்டியிருப்பதாக ஒரு தகவலும் வெளிவந்தது உண்டு. பதவி வெறி கொடுத்த போதையில் 
சகட்டு மேனிக்கு பகையை வளர்த்த ராமஜெயம் ,ஆதிமுக ஆட்சி வந்த பிறகு ,ரெய்டில் சிக்கி ,ஜெயிலுக்கு போக அஞ்சி , ,துபாய்க்கு தப்பியோட முயற்சித்தார் .
இதை தெரிந்து 
காவல்துறை ,ராமஜெயத்தை  விமான நிலையத்தில் பிடித்து  ,கோர்ட்டில் ஒப்படைத்தனர் .சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்ததை 
அறிந்துகொண்டு ,இதுதான் சமயமென ,கொலைகும்பல் ,காலை நேரமாக பார்த்து கதையை முடித்திருக்கிறார்கள் .

அராஜகம் ,அட்டுழியத்தில் ஈடுபடுவது பல 
விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ராமஜெயத்திற்கு தெரியாமல் 
போனது துரதிஷ்டமே . கடந்த கால சம்பவங்களைப் பார்த்தால் திமுக புள்ளிகளுக்கு ,எப்போதுமே காலை நேரம் கெட்டதாகத்தான் அமைந்திருக்கிறது .
திமுகவில் பல ராமஜெயம்கள் ,இந்த சம்பவத்தை பார்த்து திருந்துவார்களா என்றெல்லாம் தெரியாது .காலையில் வாக்கிங் 
செல்வதை தவிர்ப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது .. 
 

8 comments:

  1. இனி எந்த தமிழ்நாட்டுஅரசியல்வாதியும் நடைபயற்சிக்கு செல்லமாட்டான் முக்கியமாக விடியல்காலையில்.

    ReplyDelete
  2. மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகள் இனியாவது திருந்தினால் நல்லது அப்படியெல்லாம் திருந்த முடியாது என்று அடம்பிடித்தால் குறைந்தது காலை நடைபயற்சியையாவது தவிர்க்க முயற்சிக்கவும். இல்லையென்றால் நேருவின் அருமை தம்பி ராமஜெயத்தின் கதிதான் உனக்கும்.

    ReplyDelete
  3. திருந்த மாட்டார்கள்... ஆனால்... தனியாக வாக்கிங் போக மாட்டார்கள்...

    ReplyDelete
  4. morning walking is turning into mo(u)rning walki(ll)ing...

    ReplyDelete
  5. அது என்னவோ உண்மைதான்

    ReplyDelete
  6. ராமஜெயத்தின் அட்டுழியங்கள் தவறுதான் என்றாலும் அவரை இந்த முறையில் கொன்றதும் மிக தவறுதான்.

    ReplyDelete
  7. //அராஜகம் ,அட்டுழியத்தில் ஈடுபடுவது பல
    விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ராமஜெயத்திற்கு தெரியாமல்
    போனது துரதிஷ்டமே .//

    தெரியாமல் ஒன்றும் போகாது. அது ஒரு வித போதையான மனநிலை. அதிகாரவெறியும், பணபலமும், ஆட்பலமும் கொடுக்கக் கூடிய வித்தியாசமான போதை. அந்த போதையில் இருப்பவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும். ஆனாலும் அவர்களால் அதைத் தாண்டி வெளியில் வர இயலாது.

    ReplyDelete
  8. திமுகவில் பல ராமஜெயம்கள் ,இந்த சம்பவத்தை பார்த்து திருந்துவார்களா என்றெல்லாம் தெரியாது .காலையில் வாக்கிங்
    செல்வதை தவிர்ப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்