Loading

Tuesday, April 10, 2012

ocean's thirteen (ஹாலிவுட் சினிமா )


ஒசென்ஸ் 11,ஒசென்ஸ் 12 ஆகிய படங்களின் வரிசைப் பட்டியலில் கடைசிப் படம்தான் ஒசென்ஸ் 13.
கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்ற படங்களை சீரியஸ் தன்மையில் பார்த்து ,பழக்கப்பெற்ற நமக்கு,
நகைச்சுவை கலந்து ,லாஜிக் மீறாமல் ஒசென்ஸ் 13 படத்தை எடுத்திருப்பது ஒரு புதிய பாணிதான் .
இனி கதையின் சுருக்கம் ....



ரியுபனின் இடத்தை  ,வலுக்கட்டாயமாக ஏமாற்றி வாங்குகிறார் வில்லி பேங்க்.அங்கு  பெரிய சூதாட்ட விடுதியை  கட்டுகிறார் வில்லிபேங்க்.
 இதனால் ரியுபன்  நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு பெட்ரெஸ்டில் இருக்கிறார் .அவரின் சிஷ்யர்களான ஜார்ஜ்க்லூனி, மற்றும்
பிராட் பிட் குழுவினர் ,ரியுபன் ஏமாற்றபட்டதற்கு பழிவாங்க ,அந்த சூதாட்ட விடுதியை கொள்ளை அடிக்க
முடிவெடுக்கிறார்கள் .
அதன்பின் ஒவ்வொருவரும் ,அந்த ஹோட்டலின் ஒவ்வொரு பிரிவையும் நோட்டமிட்டு ,விஷயத்தை சேகரிக்கிறார்கள்.
இதனிடையே ,கொள்ளை அடிக்கும் பிளானில் ,பூகம்ப அதிர்வை உண்டாக்கக்கூடிய மிஷின் சொதப்ப, வேறு  மிஷின் வாங்க
பணம் தேவைப்படுகிறது .பெனடிக்ட் என்பவர் பணம் தர,ஒரு கண்டிஷனுடன்  முன்வருகிறார் .சூதாட்ட விடுதியில் ,உள்ள
நான்கு வைர நெக்லஸ்களை ,எடுத்து வரவேண்டுமென கண்டிஷன் போடுகிறார் .ஜார்ஜ்க்லூனி குழுவினர் ஒருவழியாக சம்மதிக்கிறார் .

அதன் பின் ..ஒவ்வொருவராக விடுதிக்குள் சென்று செய்யும் அட்டகாசங்கள்தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் காட்சிகள் .
வில்லி பேங்கின் ஸ்டெனோவை கரெக்ட் செய்யும் காட்ச்சியில் ,மேட்டேமென் செய்யும் வித்தை காமெடி  ரகம். சூதாட்ட டைஸ்கள்
தயாரிக்கும் இடத்தில் ,ஜார்ஜ்க்லூனி ஆட்கள்  ,கெமிக்கல் கலவையை கலந்து , டைஸ்களை தங்களுக்கு ஏற்ப தாயாரித்து  ,சூதாட்ட விடுதியில்
செய்யும் ஜிம்மிக்ஸ் அட்டகாசம்தான் .


கடைசியில் வில்லிபேங்க் ,ஒன்றும் செய்வதறியாமல் நிற்க.... கண்முன்னே அத்தனையையும் சுருட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள் சூதாட்டகுழுவினர் .
படத்தில் பதிமூன்று பேரும் ,ஒவ்வொரு பகுதியில் இருந்து செய்யும் தொழில்நுட்ப ஹாக்கிங்..நம்மை வியக்கவைக்கிறது .கொள்ளையர்களின் படங்களை ,அமெரிக்க போலீசார் கண்டுபிடித்து ,வில்லிபேங்க்குக்கு
ஈமெயில் அனுப்பும்போது ,அதையும் வழிமறித்து புகைப்படங்களை மாற்றும் யுக்தி நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை .காமெடி ,த்ரில்லர் ,ரொமான்ஸ்
என்று அத்தனையையும் ,சரிவிகிதத்தில் கலந்து தந்த இயக்குனர் ,ஸ்டீவனின் திறமையை வெளிப்படுத்துகிறது இந்த ஒசென்ஸ் 13.





5 comments:

  1. நண்பரே, விமர்சனம் நச்சுன்னு நல்லா இருக்கு..இன்னும் இந்த படம் பார்க்கவில்லை..மிக்க நன்றி.

    சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

    ReplyDelete
  2. இங்க வரட்டும்...பார்க்கலாம்

    ReplyDelete
  3. மிக்க நன்றி குமரன் அவர்களே

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல படம்... இந்த சீரீஸ்ல வந்த முனு படமுமே அட்டகாசமாய் இருக்கும்...
    படத்தை பத்தி ரொம்ப சுவையா சொல்லி இருக்கேங்க..

    ReplyDelete
  5. Action, Comedy பிரியர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். மூன்றுமே அட்டகாசமான மசாலா விருந்து. அழகா விமர்சனம் போட்டிருக்கீங்க. நன்றி.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்