Loading

Sunday, May 20, 2012

அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் !


சமீபத்தில் ,ராமநாதபுரம் மாவட்டம் ,முதுகுளத்தூரில் ,விளையாடிக்கொண்டிருந்த  இரு வாலிப 
வயதுள்ள பையன்கள் ,துரதிஷ்டவசமாக  இடி தாக்கி ,இறந்தார்கள் .உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க  அரசாங்க டாக்டர்கள் இல்லாததால் ,இந்த  இறப்பு சம்பவம் பதியப்பட்டு இருக்கிறது .



பொதுவாகவே கிராமப் பகுதிகளில் ,அரசாங்க டாக்டர்களின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்க 
யாருமே முன் வருவதில்லை .இதை வசதியாக எடுத்துக்கொண்ட டாக்டர்கள் வாரத்தில் ,மூன்று நாள் மட்டுமே வருகிறார்கள் ..அதுவும் பாதி நாள்தான் வேலையே பார்க்கிறார்கள் என்பது மிக நீண்ட 
காலமாகவே நடக்கின்ற  ஒன்று ..

மற்ற நாட்களில் ,டாக்டர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் ,நீங்கள் இந்தியாவில் இல்லாதவராகத்தான் இருப்பீர்கள் .ஒவ்வொரு டாக்டர்களும் சொந்தமாக கிளினிக் வைத்துக்கொண்டு நாள் தவறாமல் உழைக்கிறார்கள் ..அந்த  உழைப்பில் சிறிய அளவாவது ,அரசு 
மருத்துவமனைகளில் காட்டினாலே போதும் ,நாடே சுபிட்ச  நிலை பெரும் ..

இடி தாக்கி இறந்த சம்பவத்தில் ,கொதித்தெழுந்த  பொதுமக்கள் ,சாலை மறியலில் ஈடுபட்டார்கள் ..
டாக்டர்களுக்கு தகவல் அனுப்பியும் வரவில்லை .. டாக்டர்கள் மேல் பொதுமக்கள் ஆத்திரத்தை 
காட்டிவிடுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தார்கள் .

ஆதிமுக  எம்எல்ஏ வும் ,சம்பிராதய  விசாரிப்பை ,நடத்தி முடித்து ,கழண்டுகொண்டார் ..நீண்ட நேரம் கழித்து 
அதிகாரிகள் ,சமாதனம் செய்து ..பொதுமக்களை  கலைந்து போக  செய்தார்கள் .



ஒரு பேருராட்சி அந்தஸ்தில் உள்ள ஊரில் ,அரசு மருத்துவமனியில் ஒரு டாக்டர் கூட இல்லாதது 
பொதுமக்களிடையே அதிருப்தியை  உண்டாக்கியுள்ளது .

3 comments:

  1. இந்த அரசு மருத்துவர்களுக்கு கூலுக்கும் ஆசை
    மீசைக்கும் ஆசை.சம்பாதிக்கவேண்டும் என்றால்
    அரசுப் பணியை விட்டு தனியாக மருத்துவமனைவைத்து
    மருத்துவ வியாபாரம் செய்யலாமே
    இந்த நிகழ்வைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. இது முழுவதும் உண்மை நண்பரே இது அங்கு மட்டும் இல்லை தஞ்சை மருத்துவ கல்லூரி ரொம்ப மோசம்...

    ReplyDelete
  3. Govt should suspend the Superintendent.

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்