Loading

Monday, May 14, 2012

HUGO (ஆஸ்கார் விருது வென்ற காவியம் )



ஐந்து விருதுகளை அள்ளிய ஹுகோ திரைப்படத்தை நெடுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காண
நேர்ந்தது .விஷுவல் காட்சிகள் ,மற்றும் படத்தொகுப்பில் கலக்கி எடுத்திருக்கிறார்கள் ஹுகோ படக்குழுவினர் .
இப்போதெல்லாம் ஒரு டிராமா கான்செப்ப்டில் படமெடுத்து ரசிகர்களை கவர்வது மிகவும் சிரமமான காரியம் .
அதையெல்லாம் உடைத்து சாமானியர்களை கவரும் விதத்தில் ஹுகோ அமைந்திருக்கிறது .

சிறுவயதிலேயே தாயை இழந்த ஹுகோ ,தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறான் .ஹுகோவின் தந்தை
கடிகாரம் செய்து கொடுக்கும் வேலையை செய்கிறார் .அப்படி வேலை செய்துகொண்டிருக்கும் போது ,எதிர்பாராத
தீ விபத்தில் உயிரிழக்கிறார் .இதையடுத்து ஹுகோவை உறவினர் ஒருவர் ,அவர் வேலை செய்யும் ரயில்வே நிலையத்தில் ,
கடிகார கூண்டில் உள்ள ரூமில் வைத்துக்கொள்கிறார் .சில நாட்களில் அவரும் காணாமல் போகிறார் .இதனால் யாருடைய
ஆதரவும் இல்லாமல் ரயில்வே நிலையத்திலேயே வாழ்ந்து வருகிறான்.அவனது அப்பா பரிசாக கொடுத்த ,ஒரு மெக்கானிக்
மிஷினை ரிப்பேர் செய்து ஓடவைக்க முயற்சி செய்கிறான் .அந்த மெஷினுக்கான சாவி (இதய வடிவிலான சாவி )மட்டும் தேவை என்ற நிலை
ஏற்படுகிறது .


இதனிடையே ஹுகோ ,கையில் போதிய பணமில்லாததால் உணவுகளை திருடி உண்பதை ,ரயில்வே நிலையத்தில்
வியாபாரம் பார்க்கும் ஒரு பெரியவர் கண்டுபிடித்து அவன் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை பிடுங்கிக் கொள்கிறார் .
அதை திரும்ப வாங்குவதற்காக ,அந்த பெரியவரின் வீட்டுக்கு வருகிறான் அந்த சிறுவன் .அங்கு இசபெல்லா என்ற
சிறுபெண்ணை பார்த்து ,தன் விஷயத்தை சொல்கிறான் .நான் புத்தகத்தை  வாங்கித்தருகிறேன் என்று உறுதிகூறுகிறாள்.
இதன்மூலம் இருவரும் நண்பர்களாகிறார்கள். தன்  அப்பா ,அடிக்கடி தன்னை சினிமாவுக்கு கூட்டிப்போவார் என்பதை
சொல்கிறான் ஹுகோ .இசபெல்லாவுக்கோ படமே பார்க்கக்கூடாது என்று  லில்லியின் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார் .
இதனால் இருவரும் படத்தை யாருக்கும் தெரியாமல்  பார்க்கச் செல்கிறார்கள் .இதனிடையே லில்லியின் கழுத்தில் ,அந்த இதய வடிவிலான சாவியைப்
பார்க்கிறான் ஹுகோ .அந்த சாவியை வைத்து ,அந்த மெஷினை இயக்குகிறான்.அந்த மெஷின் ஒரு படத்தை வரைந்து ,
படத்தின் கிழே ஒரு சினிமா  இயக்குனரின் பெயரை எழுதுகிறது .

ஹுகோவுக்கு ஆர்வம் ஏற்பட்டு ,இசபெல்லாவின்  பாட்டியிடம் அதை கேட்கிறான் .லில்லியின் பாட்டி ,ஆரம்பத்தில் பயந்து ஹுகோவை
கண்டிக்கிறாள் .இதனால ,ஹுகோவும் ,லில்லியும் நூலகத்திற்கு சென்று அந்த இயக்குனரைப் பற்றிய குறிப்புகளை
தேடுகிறார்கள் .ஒரு புத்தகத்தை  பார்த்துக்கொண்டிருக்கும் ,அந்த புத்தகத்தை எழுதிய ஒருவர் ,அவரைப் பற்றிய விபரங்களை
கூறுகிற போது ,ஹுகோவும் ,லில்லியும் ஆச்சர்யமடைகிறார்கள்.அந்த இயக்குனர் வேறு யாறுமல்ல ,ரயில்வே நிலையத்தில் வியாபாரம்
பார்க்கும் பெரியவர்தான் ,அதாவது இசபெல்லாவின் தாத்தா !அதுவுமில்லாமல் ,ஹுகோ வைத்திருக்கும்
அந்த மெக்கானிக் மெஷினையும் இசபெல்லாவின் தாத்தாதான் உருவாக்கினார் என்ற தகவல் தெரிகிறது .


ஒரு இயக்குனராக இருந்து ,பின் ஏன் தனிமையில் ஒதுங்கினார் என்பதை  பின்பாதியில் சொல்கிறார்கள் .இதுதான் ஹுகோ
படத்தின் திரைக்கதை .காட்சிப்படுத்துதலை வெகு சிறப்பபாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு இது முதல் படமென்பது
ஆச்சர்யம்தான் .

அது போல ஒளிப்பதிவு இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது ,ஒரே காட்சியை .பல ஆங்கிளில்
காட்டுகிற ஒன்று பிரமிக்கத்தக்கது .இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ,ரயில்வே இன்ஸ்பெக்டராக வரும்
நபர்தான் .அவர் முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டதால் ஒரு கால் ஊனமாக இருந்தாலும் ,அவர் சிறு குழந்தைகளை
தனியாக கண்டாலே ,கடுப்புடன் ,அவர்களை அனாதை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறார்.நம் ஹுகோவும் அடிக்கடி
மாட்டிக்கொண்டு பின் ஒருவழியாக தப்பிக்கிறார்.அந்த ரயில்வேஇன்ஸ்பெக்டருக்கும் ,அங்கு பூ விற்கும் ஒரு பெண்ணின்
மீது காதல் ,ஆனால் அவரின் முரட்டு சுபாவம் காதலுக்கு ஒத்து வராமல் தடுமாறும் எக்ஸ்ப்ரெஸன் அபாரம் .துறு துறு
சுட்டிப்பையன் ஹுகோவின் இயல்பான நடிப்பு கதையுடன் ஒன்றச் செய்கிறது .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலத்தில் நடைபெறும் கதை என்பதால் ,நுணுக்கமாக ஒவ்வொரு
விசயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள் .கலை நேர்த்தியில் இந்த திரைப்படம் ஒரு மைல் கல்...கடைசியில் ஹுகொவின்
அபார அறிவு நுணுக்கத்தைக் கண்டு ,அந்த பெரியவரே தன்னுடன் வைத்துக்கொள்வதோடு படம் நிறைவுபெறுகிறது .நாவலை
படமாக எடுத்திருப்பதால்  திரைக்கதையில் கொஞ்சம்  தொய்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது.

ஹுகோ -அழகான படைப்பு !





2 comments:

  1. //காட்சிப்படுத்துதலை வெகு சிறப்பபாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு இது முதல் படமென்பது ஆச்சர்யம்தான் .//

    கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் ஸ்கோசெசி இயக்கிவிட்டாரே. முதல் படம் என்று சொல்றீங்க?

    படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிச்சயம் பார்ப்பவர்களுக்கு ட்ரீட் தான்.

    ReplyDelete
  2. இன்னும் படத்தை பார்க்கவில்லை நல்ல விமர்சனம்...

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்