Loading

Sunday, June 26, 2016

நியாயமாரே !!!

ஆள் அரவமில்லாத
ரோட்டில் நடந்துகொண்டிருந்தேன்,
திடிரென கண்முன்
100ரூபாய் தாள் கொண்ட
கட்டொன்று தட்டுப்பட்டது.
அனேகமாக 10,000ரூபாயாக
இருக்கலாமென யூகிக்க முடிந்திருந்தது.
யாரும் தவறி விட்டு விட்டார்களாவென சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஓரமாக படுத்துக்கொண்டிருந்த நாயைத் தவிர யாருமில்லை,
கீழே கிடக்கும் பணக்கட்டை
எடுத்துவிடலாமா என மனம் சபலப்பட்டது,
உண்மையில்
சபலப்பட்டது என்று சொல்வதை
தாராளமாய் எடுக்கலாமென்று
என்னை சமாதானப்படுத்தியது.
இருந்தாலும் மனதின் மற்றொரு
நேர்மையான முகம் ,
என்னிடம் விதண்டாவாதம் செய்தது.
பணக்கட்டை முதன் முதலில் பார்த்த்து,
"நீயா அல்லது நாயா என ?"
நாய்தான் என்பதை ஒப்புக்கொண்டாலும்,
இந்த பணத்தை ,நாய்
வைத்துக்கொண்டு, ஆக்சிஸ் பேங்கில் அக்கவுண்டா ஆரம்பிக்கப் போகிறதென
எனக்குள்ளே பேசிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும்
முதலில் அந்த பணக்கட்டை பார்த்தது நாய்தான் என்பதால்,
அதற்குறிய பங்கை கொடுத்துவிடலாமென
முடிவெடுத்து,
20ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட்
வாங்கி ,
வைத்துவிட்டு நடையை கட்டினேன் .
நாய் மட்டும் தனியாக ...
"நியாயமாரே" என அதன் பாஷையில் நெடுநேரமாக கத்திக்கொண்டிருந்தது .

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்